tamilnadu

img

பழைய சொல், புதிய தேடல் ‘ஆளி’

‘த பிசினஸ் லைன் ‘ என்கிற ஆங்கில பத்திரிகை ஆண்டுதோறும் பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு ஆளுமைக்கு ‘Change-maker of The Year Award’ வழங்கி கௌரவித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான விருது , ஜிஎஸ்டி வரியை நாட்டில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை சிறப்பு விருந்துநராக கலந்துகொண்டு வழங்கியவர் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் அவர்கள். 

இந்நிகழ்விற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் இராகுல் காந்தி சரக்கு மற்றும் சேவை வரி GOODS AND SERVICES TAX -ஐ GABBAR SINGH TAX (GST) என 

விமர்சனம் செய்தார். இதற்கு பாஜக, தன் கட்சியின் சிணுங்கல் பக்கத்தில் “@arunjaitley by Dr Manmohan Singh. Gabbar Singh Tax, Rahul Gandhi?,” எனப் பதிவிட்டது.

அது என்ன கப்பர் சிங்?

2007 ஆம் ஆண்டு, சப்னா தயாரித்து நடித்த அதிரடித் திரைப்படம் GABBAR SINGH. ஒரு கொள்ளைக் கூட்டத்தை எதிர்த்து ஒரு பெண் போராடி வெற்றி பெறுவதுதான் கதை. இப்படத்தில் கொள்ளைத் தலைவனின் பெயர் கப்பர் சிங்.

இதே போன்று, 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மேந்த்ரா, அமிதாபச்சன், சஞ்சீவ்குமார், ஹேமாமாலினி என பல முன்னணி நடிகர்கள் நடித்த வெற்றித் திரைப்படம் SHOLAY. இத்திரைபடத்தில் ‘இதை எனக்குக்கொடு ‘ எனத் தட்டி வழிப்பறி செய்யும் வில்லனின் பெயர் Gabbar Singh. தெலுங்கில் பவன் கல்யாண், காவலராக கப்பர் சிங் பாத்திரத்தில் நடித்த இரண்டு தொடர் வெற்றித் திரைபடங்கள் கப்பர் சிங் -I,II.இப்படங்களின் வெற்றிக்குப் பிறகே அவர் அரசியலில் இறங்கினார். இப்படத்தின் தாக்கம்தான் தமிழில், காவல்துறை வேடத்தில் சூர்யா நடித்த சிங்கம் - 1,2,3 திரைப்படங்கள். சிங்ஹ் (இந்தி), சிம்ஹம் (மலையாளம்), சிங்க (கன்னடம்), சிங்ஹமு (தெலுங்கு) என்கிற பெயரில் சிங்கம் அழைக்கலாகிறது

SINGH - மதம் மற்றும் சாதி அடையாளமாகவும் இருக்கிறது. சீக்கிய மதத்தின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங், சீக்கியர்கள் ஒவ்வொருவரும் தன் பெயருக்கும் பின் Singh சேர்த்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படியே சீக்கியர்கள் சிங் என்றானார்கள். மேலும் ஒடிசி மற்றும் வங்க மாநிலத்தில் இந்து பிரிவில் ஒரு ஜாதி ‘சிங்க்’. இந்நிலப்பகுதியிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள் சிங்களவர்கள். 

வடமொழியின் முதல் அகராதி எனச் சொல்லப்படுகின்ற அமரகோசம், சிங்கம் என்பதற்கு சிங்க, ஹரி, கேசரி, ஹர்யாக்ஷா, ம்ருகேந்த்ர, பஞ்சாஸ்ய என பலப் பொருளைத் தருகின்றது. இதில் கேசரி, அரி இரண்டும் தமிழிலிருந்து சென்ற சொற்கள். அரி என்றால் - சிங்கம். அரிமான் என்பதிலிருந்து அரிமா திரிந்தது.

கேசரி - கேசம் + அரி அதாவது தலை மயிர்கள் கொண்ட அரி (ஆண் சிங்கம்). சிங்கம் என்கிற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும் அரி, ஆளி, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல பெயர்களால் பேசப்படுகிறது. இது தவிர வயப்போத்து, சீயம், அனுகு, கேசரி, சிம்மம், மிருகராசன், அரிமா, ஏறு,... என பல பெயர்கள் உண்டு. இதில் அரிமா, ஏறு, கேசம் என்பது ஆண் சிங்கம். சிம்மம் (இராசியும் கூட) , ஆளி - பெண் சிங்கம். 

சரி, கப்பர் சிங் (GABBAR SINGH) என்பது? 

கப்பர் என்பது அரபிச் சொல். இதன் பொருள் வலிமையான, நேர்மையான, உறுதியான எனப் பொருள். அப்படியென்றால் கப்பர் சிங்க் என்பது வலிமையான சிங்கம் எனப் பொருள் கொள்ளலாம். இதற்கு நிகராக தமிழில் சொல் உண்டா? ஆளல், ஆட்சி என்கிற சொல் ஆளி என்கிற சொல்லிலிருந்து வந்தது. பரிபாடல் 8-64, குறிஞ்சி நிலக் கடவுள் முருகனை ‘ஆளி’ என்கிறது. அதாவது ஒரு நிலத்தின் தலைவன். அதேபோன்று ஒரு காட்டை ஆளும் தலைவன் ‘ஆளி’ (சிங்கம்). 

யாளி என்பது கற்பனை விலங்கு, இது யானையையும் சிங்கத்தையும் வேட்டையாடும் திறன் கொண்டது என்கிறது புராணம். இதன் சிற்பம் சிங்கமும் யானையுமாகக் கொண்டது. இச்சொல் ஆளி என்கிற சொல்லிலிருந்து பிறந்ததே. ஆளி நன்மான் அணங்குடை குருளை என்கிறது பட்டினப்பாலை. இங்கு, ஆளி நன்மான் - பெண் சிங்கம்; அணங்குடை - அரவணைத்த ; குருளை - குட்டி. ‘அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும்புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்’ என்கிறது குறிஞ்சிப்பாட்டு. இங்கு உழுவை -புலி ; ஆளி - சிங்கம்; உளியம் - கரடி; ஆமான் - வனக்காளை; களிறு - யானை.கம்பராமாயணத்தில், ‘மாவொடு ஆளி ஏவினான்’ என்கிறார் கம்பர். அதாவது ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் கும்பகர்ணனை எழுப்ப, ஒன்றின் மேல் ஒன்றென ஆயிரம் குதிரை, சிங்கங்களை ஏவினான். செடிகளில் ஆளி என்றொரு வகை உண்டு. இதன் குடும்பம் மற்றும் பேரினம் Linaceae, Linum. இவை லத்தீன் சொற்கள். இதிலிருந்து வந்ததுதான் LION. ஆளி நாறு ஆடை - Linen. ‘ஆளியி னணங்கும் அரியின் குருளையும் ‘ என்கிறது சிலப்பதிகாரம். ஆளியின் அணங்கு - பெண் சிங்கக்குட்டி; அரியின் குருளை - ஆண் சிங்கக் குட்டி. 

LION (அரி) - lioness (ஆளி)

செடிகளில் ஆளி என்றொரு வகை உண்டு. இதன் குடும்பம் மற்றும் பேரினம் Linaceae, Linum. இவை லத்தீன் சொற்கள். இதிலிருந்து வந்ததுதான் LION. 

ஆளி நாறு ஆடை - Linen. ‘ஆளியி னணங்கும் அரியின் குருளையும் ‘ என்கிறது சிலப்பதிகாரம். ஆளியின் அணங்கு - பெண் சிங்கக்குட்டி; அரியின் குருளை - ஆண் சிங்கக் குட்டி. LION (அரி) - lioness (ஆளி)